Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 19 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
பாடசாலை மாணவனொருவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று, அலதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்லதுபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபரும் கடுங் காயங்களுக்கு உள்ளாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த மாணவன், நுகவெல மஹா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்ற 17 வயது மாணவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், மதிலொன்றில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை என்பதுடன், மாணவனும் அவருடன் பயணித்த நபரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாணவனிடம் மோட்டார் சைக்கிளை வழங்கிய உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .