Janu / 2025 ஜூன் 25 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண் ஒருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, கெலேகலைப் பகுதியில் வைத்து புதன்கிழமை (25) காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக அதே திசையில் பயணித்த பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிள் சறுக்கி, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ

9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago