Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 மார்ச் 20 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜ்
பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று(20) காலை 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்த ஆசிரியர் பரணிதரன் (வயது -39) பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வருவதுடன், பாடசாலை கடமைக்கு சென்று கொண்டிருந்த போேது இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக பிரதேச மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago