Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
நோர்வூட் நகரில் இடம்பெற்ற, குழு மோதலில், பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட, ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தினருக்கிடையே, நேற்று (28) மாலை, 6 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலுக்குள்ளானவர்களே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதல் சம்பவத்தின் போது, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வாகனமும், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வாகனமும் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், தாக்குதல் சம்பவத்தினால் பாதிப்படைந்த, நோர்வூட் பிரதேச சபையின், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பனர்களான சூசை அலெக்சான்டர், என்.ராமச்சந்திரன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் பா.சிவனேசன் உட்பட ஆதரவாளர்கள் இருவருமாக ஐவர், டிக்கோயா மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில், நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago