Gavitha / 2021 ஜனவரி 07 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ மோரா தோட்டத்தில் இயங்கி வந்த தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகம், நேற்று (06) தொடக்கம், கொரோனா சிகிச்சை நிலையமாக உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிகால்வீரசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில், இதன் முதல் கட்டமாக, லிந்துலை, பத்தனை ஆகிய பகுதிகளில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்கள் இதில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வெளிமாவட்டங்களில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோரும் இதில் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால், நுவரெலிய மாவட்டத்தில், கடந்த காலங்களில் 3 நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன என்றும் அதில், பொகவந்தலாவ மோரா பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் மாத்திரமே, ஒரே நேரத்தில் 138 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் ஹங்குரான்கெத்த, கண்டி – பொல்கொல்ல, தெல்தெனிய, யக்கல, பல்லேகல ஆகிய பகுதியில் சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாகவும் வலப்பனை மற்றும் கொத்மலை, மல்தெனிய ஆகிய பகுதிகளில், இரண்டு கொரோனா சிகிச்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில், இதுவரை 1,398 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 628 பேருக்கும் மாத்தளை மாவட்டத்தில் 187 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் அதிகமானோர், சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
58 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
17 Dec 2025
17 Dec 2025