2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

யாத்திரை சென்றவர் சடலமாக மீட்பு

Janu   / 2025 பெப்ரவரி 06 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்காக வந்து தனது மனைவியுடன் சீத கங்குள ஓயா வில் குளிக்க சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

பசறை பகுதியை சேர்ந்த (34) வயதுடைய ருவான் சதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது மனைவி மற்றும் நண்பர்கள் குழுவுடன் புதன்கிழமை (05) அன்று  பசறை பகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்துள்ளார். வழிபாடுகளில் ஈடுபட்டு வியாழக்கிழமை (06) காலை வாகன நிறுத்தும் இடத்திற்கு வந்தபோது, ​​தனது மனைவியுடன்  சீத கங்குள ஓயா வில் குளிக்க சென்றுள்ளார்.   அந்த இடத்தில் ஏராளமான பெண்கள் குளித்துக் கொண்டிருந்ததால், அவர் தனது மனைவியை அந்த இடத்தில் குளிக்கச் சொல்லிவிட்டு, உயர்ந்த பகுதிக்குச் சென்று குளித்துள்ளார்.

நீண்ட நேரம் சென்றும் தனது கணவன் திரும்பி வராததால்  இது தொடர்பில் மனைவி நல்லதண்ணிய பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் அவரது சடலம்  சீத கங்குள ஓயாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  நல்லதண்ணிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X