Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சனகுமார ஆரியதாச
தம்புள்ள, ஹபரண பிரதான வீதி, திகம்பதஹ பிரதேசத்தில், நேற்று இரவு, எண்ணெய் பவுசரொன்று பாதையைக் கடக்க முயன்ற யானை மீது மோதியதில், வாகனங்கள் மூன்று சேதமடைந்துள்ளதுடன், வாகன சாரதிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தில் மோதுண்ட யானை காணாமல் போயுள்ளதாகவும் அதனை தேடும் பணியில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளயிலிருந்து பொல்லன்றுவை நோக்கிச் சென்ற எண்ணெய் பவுசரானது, பாதையை கடக்க முயன்ற யானை மீது மோதியதில், பவுசரின் சாரதி படுகாயமடைந்துள்ள அதேவேளை, பவுசரும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் ஹபரணயிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனத்தின் சாரதி, விபத்தை நேரடியாகக் கண்டு தனது வாகனத்தை சாடரென நிறுத்தியுள்ளார். இதன்போது, கெப் ரக வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.ச பஸ், கெப்ரக வாகனத்தின் மீது மோதியதில், குறித்த வாகனம் முற்றுமுழுதாக சேதமடைந்ததுடன் கெப்ரக வாகனத்தின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ்ஸில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித ஆபத்துகளும் இல்லை என்று தெரிவித்த பொலிஸார், பயணிகள் மற்றுமொரு பஸ் வரவழைக்கப்பட்டு, அதில் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago