Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
வரலாற்று பிரசித்திப்பெற்ற சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் பெரஹெரவில்
கலந்துகொள்ளும் யானைகளுக்கு, சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் ஆடைகள் வழங்கி
வைக்கப்பட்டன.
மேற்படி யானைகளுக்கான ஆடைகள் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் நேற்று முன்தினம் (6) மாகாண சபை கட்டிடத்தொகுதியில் வைத்து, சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே மிகார ஜயசுந்தரவிடம் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த ஆடைகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பெரஹெரவில் கலந்துகொள்ளும் யானைகளுக்காக வடிவமைக்கப்படும், கண்டியில் உள்ள புனித ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .