Editorial / 2018 மே 08 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகரில் அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் யுவதியொருவர் புத்தரின் உருவப்படத்துடனான சேலையை அணிந்து வந்தமைத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் குறித்த சேலையை தமது பொறுப்பின் கீழ் இன்று (8) கொண்டு வந்தனர்.
பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் குறித்த யுவதி அனுமதி கிடைக்கும் வரை தற்காலிகமாக இந்த நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (7) ஹட்டன் நகரிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்திலிருந்து இந்த சேலையை 1500 ரூபாய்க்கு கொள்வனவு செய்ததாகவும் யுவதியிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, இந்த சேலை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இதேப்போன்ற வேறு சேலைகளை இதுவரை விற்கவில்லை என்றும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025