Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 மே 30 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யோகாப் பயிற்சியும் பத்து இலட்சம் மரக்கன்று நடுகை வேலைத்திட்டமும், கண்டி - போகம்பரை மைதானத்தில், எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதியன்று காலை 8 மணிமுதல் 11 மணிவரை நடைபெறவுள்ளது.
வட இந்தியாவின் ரிஷிகேசியிலிருந்து வருகை தரும் யோகா குரு விபின் பலோனி தலைமையிலான குழுவுடன் இணைந்து, குருஜி ஜெயகுமார், யோகா பயிற்சிகளை வழங்குவார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன, மாகாணசபை உறுப்பினர் காமினி விஜேபண்டார, மத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திஸாநாயக்க மற்றும் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தோ ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இவ்வாறானதொரு செயற்பாடு, உலகிலேயே முதன்முறையாக இடம்பெறவுள்ளதென, கண்டி யோகா அகடமி தெரிவித்தது.
நாடளாவிய ரீதியில், 10 இலட்சம் மரக்கன்றுகளை, 5 வருடங்களில் நடும் திட்டத்தை வெற்றியூட்டும் வகையிலேயே, இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025