2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரூ. 5,000 போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Gavitha   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

போலி நாணயத்தாள்களுடன் மந்திரவாதி உட்பட மூவரை, புத்தலக்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து, பொலிஸார், புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

மந்திரவாதி எனக் கூறப்படும் நபர், புத்தல பகுதியில் உள்ள வியாபார நிலையமொன்றில், பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு, அவர் ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றை கொடுத்துள்ளார்.

நாணயத்தாள்களில் வித்தியாசத்தை அறிந்துகொண்ட வியாபாரி, அதுத் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, புத்தல லுணுகம்வெஹெரவில் உள்ள வியாபார நிலையத்துக்கு, முச்சக்கர வண்டியில் வந்த இருவர், மூன்று கிலோகிராம் சீனியை கொள்வனவு செய்துவிட்டு 5,000 ரூபாய் பெறுமதியான நாணயத்தாளை கொடுத்துள்ளனர். , அந்த தாள் ​போலியானது என அறிந்துகொண்ட வர்த்தகர், அதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, விரைந்துசெயற்பட்ட பொலிஸார் அவ்விருவரையும் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி இருவரினதும் கைப்பையை சோதனையிட்ட பொலிஸார் அதிலிருந்து, மேலுமொரு 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை மீட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .