2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரகளை செய்த காதலன்: ரயிலிலேயே ​மோதி பலி

R.Maheshwary   / 2022 நவம்பர் 07 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

​தனது திருமண கோரிக்கையை காதலி நிராகரித்ததாகத் தெரிவித்து, மனமுடைந்த இளைஞன், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள இரண்டு முறைகள் முயற்சித்து அவை பயனளிக்காமையால், மூன்றாவது முறையாக ரயிலில் மோதுண்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் மொரட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. காதலனும் காதலியும் மஸ்கெலியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண கோரிக்கையை காதலி நிராகரித்ததை அடுத்து, காதலியின் முன்பாகவே சில குளிசைகளை விழுங்கியுள்ளார். அந்த முயற்சி கைகூடவில்லை என அறியமுடிகின்றது.

அத்துடன் காதலி பணிப்புரியும் கடைக்குச் சென்று தனது உடலுக்கு தீயை மூட்டிக்கொண்டு   காதலியை கட்டிப்பிடிக்க முயற்சித்ததுள்ளார் அதுவும் தோல்வியடைந்துள்ளதுடன் மறுநாள்  வெள்ளவத்தை பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் ருஹுனு குமாரி  ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியா-  ரதர்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த  28 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது.

கட்டுபெத்த சந்தியில் உள்ள கார் உதிரி பாகங்கள் கடையில் பணிபுரிந்த ​இவர், தனது  காதலியைத் தேடிச் சென்று, திருமண கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எனினும் இதனை விளையாட்டாக எடுத்துள்ள அவரது காதலி அதனை நிராகரித்ததையடுத்து, உடனடியாக காதலி முன்பாகவே சில மாத்திரைகளை விழுங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் இரண்டு மணி ​நேரத்துக்கு பின்னர் தனது காதலியைத் தேடி அவர் தொழில் செய்யும் இடத்துக்குச் சென்ற இளைஞன், அந்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் அனுமதிப் பெற்று மலசலகூடத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து தனது உடலில் தீயை பற்றவைத்தவாறு  வந்த அவர், காதலியை கட்டிப்பிடிக்க முற்பட்ட போது, வர்த்தக நிலைய உரிமையாளரால் ​அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே ஓடிய இளைஞன், மறுநாள் ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி களுபோவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .