2025 மே 09, வெள்ளிக்கிழமை

ரணமயூர விருதை திருடியவர் கைபையில் கையை வைத்து சிக்கினார்

Editorial   / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டியில் எசல பெரஹராவின் முதல் நாள் பெரஹராவை காண வந்த பெண்ணிடம் பணப்பையை திருட முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மூத்த ஒளிப்பதிவாளர் அமரர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் சவப்பெட்டிக்கு  அருகில் வைக்கப்பட்டிருந்த ரணமயூர விருது திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பெரலிய திரைப்படத்தை இயக்கியதற்காக கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு புதுடெல்லி திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட ரணமயூர விருதை இந்த சந்தேகநபர் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை அடையாளம் கண்டுகொண்டனர்.

பொலிஸ் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 71 வயதுடைய சந்தேக நபர், கும்பல் பெரஹராவை காணவந்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்து பணப்பையை திருட முயற்சித்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில், கண்டி தலைமையக பொலிஸ் குற்றப் பிரிவின் நிலைய   பிரதம பொலிஸ் பரிசோதகர் நளின் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X