2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

’ரிப்பன் வெட்டுவது மட்டும் பணி அல்ல’

Freelancer   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ் 

சமூக மாற்றத்தில் பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியமையாதது. எனவே, எனது சமூகப் பணியில் பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறேன்  என தொழிலாளர் தேசிய முன்னணியின்  நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் மு.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் சிறுவர் முன்பள்ளிகளுக்கு தொற்று நீக்கி வழங்கி வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஒஸ்போன் தமிழ் வித்தியாலத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில்  கணபதி ,ஒஸ்போன், டங்கொல்ட், சமர்வில், கிளவட்டன் பாடசாலைகளின்  அதிபர்கள், ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாடசாலைகளில் அரசியல் செய்வதை தவிக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கில்லை. ஆனாலும் சமூக மாற்றத்தில்
பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியதாதது என்ற வகையில், எனது சமூக பணியில் பாடசாலைகளுக்கு முக்கியத்தும் வழங்கி வருகின்றேன்  என்னைப் பொறுத்தவரையில் சமூக சேவை என்பது அரசியல் பிரவேசத்தின் பின்னரானது அல்ல.

ஊடகத்துறையில் கலை, கலாசார,இலக்கியம் மற்றும்  கல்வித்துறைகளை
உக்குவிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து செய்துவருகிறேன் அதன் பின்னராக பிரதேசசபை உறுப்பிராக தெரிவானதன் பின்னர், பிரதேசசபை உறுப்பினர் என்ற வரையறைக்கு குறுகிய காலத்திற்குள்   அதிகளவான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.

அரசியல்வாதி என்றால் ரிப்பன் வெட்டுவது மட்டும் பணியல்ல மாறாக கலை, கலாசாரம், விளையாட்டு, கல்வி, ஊக்குவிப்பு திட்டங்களை
முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எனது நோக்கம்.

அந்த வகையில், கடந்த காலங்களில் வட்டாரத்திலுள்ள சகல முன்பள்ளிகளுக்கும் கற்றல் உபகரணங்களும், பாடசாலைகளுக்கு சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தினூடாக மலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன், பிரதேசத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் வாசிகசாலைகளுக்கு நூல்கள் கையளிக்கப்பட்டன. புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கருத்தரங்குகள், சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இவ்வாறு  தொடர்ந்து எனது அரசியல் பணியை முன்னெடுக்கவும் எனது சமூக சேவையை தொடர்ந்து முன்னெடுக்கவும் கல்விச் சமூகத்திடமிருந்து ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்பார்கிறேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X