2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ரூ.700 இலட்சம் செலவில் நிலத்துக்கடியில் வாகனத் தரிப்பிடம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாநகரில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நிலத்துக்கடியில் பாரிய வாகனத்தரிப்பிடம், வர்த்தக்தொகுதி என்பன நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டில், சுமார் 700 இலட்சம் ரூபாய் செலவில், இக்கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
மூன்று மாடிகளைக்கொண்டு நிர்மாணிக்கப்படும் இக்கட்டடத் தொகுதியில், இரு மாடிகள் வாகனங்கள் தரிப்பிடத்துக்காகவும் மூன்றாம்மாடி வர்த்தக நிலையங்களுக்குமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரு மாடிகளிலும் 250 வாகனங்களை நிறுத்தி வைக்கமுடியுமென, கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கூடாக, பதுளை மாநகரில் நிலவும் வாகனநெரிசலை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமென்று, தாம் எதிர்ப்பார்ப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .