2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ரூ2,000 கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Janu   / 2025 ஜூலை 31 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2000 ரூபாவாக உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை (31) அன்று ஹட்டன் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர் மையம், ​சமூக நீதிக்கான மலையக மக்கள் இயக்கம் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களால் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2000 ரூபாவாக அதிகரித்தல், தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குதல்,  லயன் அறைகளுக்குப் பதிலாக நிலம் வழங்குதல், தோட்ட அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் குடியுரிமை வழங்குதல், சிவில் விவகாரங்களுக்கு இடையூறாக இருக்கும் தோட்ட அதிகாரிகளின் அதிகாரத்தை ஒழித்தல், பகல் நேர பராமரிப்பு மைய வசதிகளை விரிவுபடுத்துதல், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்குத் தீர்வுகளை வழங்குதல், உயர்தர அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கான தமிழ் மொழி கல்வி முறையை விரிவுபடுத்துதல், மலையக மக்களைத் தேசிய சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வது போன்ற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மலையக நிருபர்கள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .