2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

லிட்டில்வெளியில் காணிப் பகிர்வு இடைநிறுத்தம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம், கு.புஸ்பராஜ்

கண்டி - தெல்தோட்டை லிட்டில்வெலி தோட்டத்தில் முறையற்ற வகையில் இடம்பெற்றுவந்த காணி பகிர்வு, மலை நாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  

கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள லிட்டில்வெளி தோட்ட  காணிகளை தெல்தோட்டை பிரதேச செயலாளர், முறையற்ற வகையில் பகிர்ந்தளித்து வருவதாக தெரிவித்து  லிட்டில்வெளி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்கும் கொண்டுச் சென்றனர்.   

மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய இன்று(11)  காலை தெல்தொட்ட பிரதேச செயலகத்துக்கு  விஜயம்செய்த அமைச்சர், அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் காணி பகிர்வை உடனடியாக இடைநிறுத்துமாறு பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக  ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன்   கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .