2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

லயன் குடியிருப்பில் தீ

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்,ரஞ்சித் ராஜபக்ஷ

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் 07ஆம் இலக்க லயன் குடியிருப்பில்  நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென்று தீ பரவியதில், 03 வீடுகளும் ஏனைய வீடுகளின் கூரைகளும் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பில் வசிக்கும் 14 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தேயிலை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குடியிருப்பில் பரவிய தீயை அயலவர்கள் கட்டுபாட்டுக்குள்  கொண்டுவந்துள்ளனர். மின்சாரக் கோளாறே இத்தீ விபத்துக்கு காரணமெனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .