2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

லயன் அறையில் இருந்து தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

Editorial   / 2023 டிசெம்பர் 29 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, கெஹலோவிதிகம வம்பத்துஹேனேவில் உள்ள லைன் அறையொன்றில் இருந்து குழந்தையின் சடலமும், அக் குழந்தையின் தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அலபத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, சிறுவனின் 21 வயதுடைய தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அலபாத பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குழந்தையை கொன்றுவிட்டு தாய் தன்னுயிரை மாய்த்துக்  கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிவநாதன் வசந்தகுமாரியின் கணவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியமை நீதவான் விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X