2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

R.Tharaniya   / 2025 ஜூன் 11 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலையில் உள்ள லிந்துல நகரசபைக்குச் சொந்தமான இறைச்சிக் கூடத்தை குறைந்த விலையில் வழங்கியதன் மூலம் ரூ.2.3 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லிந்துல நகரசபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு தலா ரூ.2 மில்லியன் வீதம் இரண்டு பிணைப் பத்திரங்களை விதித்த நீதவான், வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

லிந்துல நகரசபையின் தலைவராக2019 ஆம் ஆண்டில்,  செயல்பட்டபோது, ரூ.2.3 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால்,  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அதன் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .