Freelancer / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா
லிந்துலை – தலவாக்கலை நகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
நகரசபைத் தலைவர் லெட்சுமணன் பாரதிதாஸன் தலைமையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட வாக்கெடுப்பு, இன்று (07) இடம்பெற்றது.
இதன்போது திட்டத்துக்கு ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர்களான சந்தன குணதிலக, பிரசன்ன விதானகே ஆகிய இருவருமே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அத்துடன் சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர், இன்றையதினம் சபைக்கு சமூகம் தரவில்லை.
இதேவேளை மொட்டு அணியை சேர்ந்த மயில்வாகனம் பரமானந்தன் என்ற உறுப்பினரது இடத்துக்கு அஸங்க சம்பத் என்பவருக்கு நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில், இந்த நியமனம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பரமானந்தன் என்ற உறுப்பினர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பில் முறையிட்டதையடுத்து மாற்று நியமனத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த உறுப்பினரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் இன்றைய வரவு செலவு திட்டம் தோல்லியடைந்துள்ளது.
அத்துடன், நீதிமன்றத் தடையுத்தரவினால் புதிதாக நியமனம் வழங்கப்படவிருந்த அசங்க சம்பத் என்பவரை சபைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago