செ.தி.பெருமாள் / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சுகாதார வைத்திய சேவைகள் காரியாலயத்தின் ஊடாக, 2018 ஆண்டில் நடைபெற்ற சுவநாரீ வைத்தியச் சேவை போட்டியில், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட லிந்துலை பொது சுகாதார காரியாலயம், முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இப்போட்டியானது, மாவட்ட மட்டம், தேசிய மட்டம் என நடைபெற்றிருந்தது. மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும், லிந்துலை பொது சுகாதார காரியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சுகாதார அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது, இப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழும் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபய குணரத்ன,
நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார திணைக்கள காரியாலயத்தின் ஊடாக தேசிய மட்டத்தில் கிடைக்கப்பெற்ற பாரிய வெகுமதி இது என்றும் தமது கட்டுப்பாட்டில் உள்ள இக்காரியாலயத்தில் ஆளனி பற்றாக்குறைக் காணப்பட்டாலும் நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான ஒரு வெகுமதி கிடைத்துள்ளமையை எண்ணி, பெருமையடைவதாகவும் கூறினார்.
29 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
30 minute ago