Janu / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிராந்திய சுகாதார பணிமனை பிரிவுக்குட்பட்ட் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு பின்புறத்தில் பாரிய மண் மேட்டில் இருந்து கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால். இங்கு சிகிச்சைக்காக வரும் பொது மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.
தற்போது கட்டிடத் தொகுதியும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு இயற்கை அனர்த்த மத்திய நிலையத்தின் ஊடாக மண்சரிவு அபாயம் அறிவிக்கப்பட்டு இருந்த போதிலும் இதுவரை இந்த வைத்தியசாலை பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகள் எவரும் கவனம் செலுத்தாத காரணத்தினால். இங்கு வரும் நோயாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி 100 க்கும் மேற்பட்ட மக்கள் புதன்கிழமை காலை 10, மணி முதல் 11.30 மணி வரை குழந்தைகளை வைத்துக்கொண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துவாரக்ஷான்


6 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago