2025 மே 07, புதன்கிழமை

லுணுகலையில் 70 அனுமதிப்பத்திரங்கள் இரத்து

R.Maheshwary   / 2021 ஜூன் 06 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

லுணுகல பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட நடமாடும் வர்த்தகத்துக்கான 70 அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இரத்துசெய்யப்பட்டு, புதிதாக 5  மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதென லுணுகல பிரதேச செயலாளர் நிமல் திசாநாயக்க தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்காக இந்த அனுமதிப்பத்திரங்களை சிலர், போக்குவரத்து சேவைக்காகப் பயன்படுத்துவதாக கிடைக்கபெற்ற தகவல்களுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து 70 அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டு, நடமாடும் சேவையை உரியமுறையில் முன்னெடுத்த 5 வாகனங்களுக்கு மாத்திரம் புதிதாக இன்று (6) அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X