2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

லுணுகலையில் ஒருவருக்கு தொற்று: 60 பேரின் பரிசோதனையில் தொற்றில்லை

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுரேந்திரன் 

லுணுகலை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இணங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பைப் பேணி வந்த 60 பேருக்கு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இந்த 60 பேரில், எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என, லுணுகலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

மேலும், லுணுகலை பிரதேசத்துக்கு, மேல் மாகாணத்தில் இருந்து எவரேனும் அண்மைய நாள்களில் வருகைத்தந்திருந்தால், உடனடியாக லுணுகலை பொது சுகாதார நிலையத்துக்கு வருகைத்தந்து, தமது விபரங்களைத் தெரியப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

அண்மையில் பேலியக்கொட மீன் சந்தையிலுள்ள உணவகத்தில் தொழில் புரிந்த ஒருவரே, கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X