Editorial / 2026 ஏப்ரல் 26 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியில் விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, 25-ஆம் திகதி மாலை வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்: வெல்லவாய பகுதியிலிருந்து ஹற்றன், எபோஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே, ஹற்றன் - நுவரெலியா வீதியின் கிளாஸ்கோ பகுதியில் இவ்வாறு 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லொறி பயணித்துக் கொண்டிருந்த போது, அதன் பிரேக் தொகுதி திடீரென செயலிழந்ததால், சாரதியால் லொறியைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026