Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
'கண்டி, தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளியார் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'இவ்வாறான குடியேற்றங்கள் காரணமாக கண்டி மாவட்டத்திலுள்ள அநேகமான தோட்டங்களில், பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் தோட்ட தொழிலாளர்கள் வீதிக்கு விரட்டப்பட்டுவிட்டனர். மீண்டும், நியாயமற்ற முறையில் தோட்டங்களில் வாழ்கின்ற மக்களை அச்சுறுத்தி வாயடைக்க செய்துவிட்டு குடியேற்றம் நடத்தப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை இவ்விடயம் தொடர்பாக நடந்த கலந்துரையாடலின்போது, கலஹா பிரதேச செயலாளர்; தனது உயிரை பணயம் வைத்தாவது இந்த குடியேற்ற திட்டத்தை நிறைவேற்றப்போவதாகவும், இது தொடர்;பாக தன்னோடு யாராவது கதைக்க முற்பட்டால் தமது கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக பொலிஸ் முறைபாடு செய்து, அவர்களை சிறைக்கு அனுப்பப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
தோட்ட மக்களின் எதிர்ப்பையும் மீறி, பிரதேச செயலாளர்; குடியேற்றம் நடத்துவதில் அரசியல் பின்புலம் இல்லாமல் இருக்க முடியாது. நாட்டின் கடந்தகால கசப்பான நிகழ்வுகள் மீண்டும் தலைதூக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, தற்போதைய நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கத்துக்கு கண்டி மக்கள் வாக்களித்து ஆட்சி பீடமேறச் செய்தனர்.
தெல்தோட்ட, லிட்டில்வெளி தோட்டத்தில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்;. பழமையான லயன் அறை ஒன்றில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் அந்த குடும்பங்களின் வீட்டு தேவையை உதாசீனம் செய்துவிட்டு வெளியாருக்கு 20 பேச் காணியை வழங்கி, வீடமைப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சிலரின் அரசியல் தேவைகளை அரசாங்க அதிகாரிகளை கொண்டு நிறைவேற்றிக்கொள்ளும் அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும்.
கண்டியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தாம் இழந்த பிரதிநிதித்துவத்தை மீட்டுவிட்டதாக பெருமை கொண்டால் மட்டும் போதாது. அந்த பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் தோட்ட தொழிலாளர்கள் வீதிக்கு விரட்டப்படாமலிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்;' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago