Sudharshini / 2016 மே 21 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
நோட்டன், லக்ஷபான பிரதான வீதியில் நோட்டன் இரண்டாம் கட்டை பகுதியில் இன்று (21) மரக்கிளை முறிந்து விழ்ந்ததால், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் பிரதேசத்துக்கான மின்சாரமும் தடைப்பட்டிருந்தது என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நோட்டன் பிரிட்ஜ் மின்சாரசபைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவ்விடத்துக்கு வந்த மின்சார சபையினர் மரக்கிளை வெட்டி அகற்றியதையடுத்து, போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
தற்போது அப்பகுதிக்கான மின்னிணைப்பை வழங்கும் நடவடிக்கையில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .