Sudharshini / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா, மொஹொமட் ஆஸிக்
மலையகத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளனர் ஹப்புத்தளை, விகாரகலை பகுதியில் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
பெரகலையிலிருந்து ஹப்புத்தளையை நோக்கிப் பயணித்த லொறியும் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு செவ்வாய்க்கிழமை (29) மாலை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி, 33 வயதுடைய பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை (29) மாலை உயிரிழந்துள்ளார் என கடுகன்னாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவை பிரதேசத்தில் வைத்தே இப்பெண், ரயிலில் மோதுண்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இவரை, கண்டி வைத்தியசாலையில் அனுமதித்தப்போதும் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026