2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் படுகாயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், கு.புஸ்பராஜா,

சாமிமலை மற்றும் டயகமை ஈஸ்ட் ஆகியப் பகுதிகளில், இன்று நடைபெற்ற இருவேறு விபத்துகளில், 65 வயது பெண் உயிரிழந்துள்ளதுடன், 19 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டயகமையிலிருந்து டயகமை ஈஸ்ட் 15க்கு சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த சிறுவன், பஸ்ஸிலிருந்து இறங்கும்போது, அதே பஸ்ஸின் சில்லி மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  சிறுவன், டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப்  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை, டயகமை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .