2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

விபத்தில் முதியவர் படுகாயம்

Sudharshini   / 2016 ஜூன் 02 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (02) இடம்பெற்ற விபத்தில் லிந்துலை, லெம்லியர் தோட்டத்தைச் சேர்ந்த சென்கன் அரசன் என்ற 69 வயது முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த மேற்படி நபர் மீது, முச்சக்கரவண்டியொன்று மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில் காயமடைந்த நபரை, தலவாக்கலை பொலிஸார், லிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேற்படி நபர், லிந்துலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக  நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மீண்டும் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக  விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .