2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலமும் சிகிச்சை முகாமும்

Sudharshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

உலக நீரிழிவு நோய் தடுப்பு தினத்தையொட்டி, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் சிறுநீரக சிகிச்சை முகாமும் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றன.

கண்டி வைத்தியசாலை முன்னால் ஆரம்பித்த இவ்ஊர்வலம், கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன்றலை வந்தடைந்ததும் அங்கு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் மாகாண சபை அங்கத்தவர் லாபிர் ஹாஜியார் செய்னுள் ஆப்தீன், மாவட்டச் செயலாளர்  எச்.எம்.பி. இட்டி சேகர உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக இடம்பெற்ற ஆரம்ப வைபவத்தின் போது முதலமைச்சர், கண்டி வைத்தியசாலையின் ஈ.என்.டி. (காது, மூக்கு, தொண்டை) பிரிவுக்கு தளபாடங்கள் சிலவற்றை கடமையிலுள்ள பிரதான தாதி சாந்தனி தெபகொல்ல மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் சமன் ரத்நாயக்கா ஆகியோரிடம் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .