Ilango Bharathy / 2021 ஜூன் 17 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிபர் மற்றும் ஆசியர்களால் வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்களுக்கான சலுகையை நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்க வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதென, அச்சங்கத்தின் உப தலைவர், சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் 3 மாதங்கள் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்,
மாணவர்களுடைய கல்வியை நிகழ்நிலை மூலம் புதுப்பிப்பதற்கு தேவையான கருவிகள் மற்றும் டேட்டாக்களை அரசாங்கத்தின் உதவியின்றி, ஆசிரியர்கள் தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்தே கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றமை ஊடாகவும் ஆசிரியர்கள் சிக்கல்களை
எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே கருசேதா போன்ற பல்வேறு வங்கிக் கடன் திட்டங்களால் பெறப்பட்டுள்ள
கடன்களுக்கான மாதாந்த தவணைகளையும் அதற்கான வட்டியையும் திருப்பி செலுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த மாத்த்திலிருந்து மீண்டும் பாடசாலைகள் திறக்கும் வரை கடன் தள்ளுபடி வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நேற்று முன்தினம் (15) பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago