Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா வசந்த கால வர்த்தக நிலையங்களில் அதி கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா ஏப்ரல் மாத வசந்த காலம் ஆரம்பமாகிய நிலையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் சித்திரை புத்தாண்டுடில் நீண்ட விடுமுறை காணப்படுவதனாலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடு முறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர் . வசந்த காலத்தினை வாய்ப்பாக பயன்படுத்தி நுவரெலியா நகர பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நகர பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில்
அரசாங்கத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் , விலைக்கு மேலதிகமாக பணம் அறவிடப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா கிரகறி வாவி பகுதியிலும் , பிரதான நகரிலும் இயங்கி வருகின்ற சில்லறை மற்றும் வசந்த கால தற்காலிக வர்த்தக நிலையங்களிலும் குறிப்பாக ஹோட்டகளில் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கே விற்பனை செய்து வருவதாகவும் எந்தவித கட்டுப்பாட்டு விலைக்கும் பொருட்கள் விற்கப்படுவதில்லை குறிப்பிட்டுள்ளனர்.
டி.சந்ரு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
39 minute ago
50 minute ago
2 hours ago