Freelancer / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முறைசாரா பெண் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா? என்று கேள்வி எழுப்பப்படுமானால் இல்லை என்ற பதிலே மேலோங்கி காணப்படுவதாக ப்ரொடெக்ட் சங்கத்தின் ஹட்டன் கிளைக்காரியால தலைவி கிரிசாந்தி தமிழ்செல்வம் தெரிவித்தார்.
ஹட்டனில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
ஆடைத்தொழிற்சாலை மற்றும் விற்பனை நிலையங்களில் அதிகளவான பெண்கள் தொழில் புரிந்து வருகின்றனர். இந்த துறைகளில் தொழில் புரியும் பெண்கள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக தமது உழைப்பை பெற்றுக் கொடுத்தாலும் அவர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய சமூக நல விடயங்கள் முறையாக கிடைப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இந்த துறைகளில் தொழில் புரியும் பெண்கள் சுமார் 10 மணித்தியாலயத்திற்கும் மேல் தொழிலில் ஈடுப்படும் நிலையில் அவர்களின் உழைப்பு சுரண்டப்படும் நிலையே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் இந்த துறையில் தொழில் புரியும் ஆண்களும் பெண்களின் உழைப்பு தொடர்பில் கண்டுக்கொள்வதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
உடல், உள, பௌதீக ரீதயான சமவுரிமை கிடைக்கப்பெறும் பட்பசத்திலேயே சமத்துவம் பெண்களுக்கும் கிடைக்கப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.பிரபா

7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago