Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (21) மாலை பெய்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக டொரிங்டன் பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததால், அப்பகுதியில் இருந்த பெருமளவான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த மரக்கறி வகைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
அதேவேளை, அக்கரப்பத்தனை ஆட்லோ (Agrastenn-Atlow) தோட்டத்தில் வெள்ள நீர் 25 வீடுகளுக்குள் புகுந்ததன் காரணமாக 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் நீர் புகுந்தமையால் மக்களின் உடைமைகள், உணவுப் பொருட்கள் மற்றும் பெறுமதியான உபகரணங்கள் என்பன சேதமடைந்துள்ளன. குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வெள்ள நீரில் நனைந்து வீணாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
மேலும், பெரிய நாகவத்தை தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து 10 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 30-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இக்கனமழை காரணமாக இப்பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago