2025 மே 12, திங்கட்கிழமை

வட்டக்கொடை நகரத்துக்குப் பூட்டு

Kogilavani   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்,  டி.கேதிஸ்

தலவாக்கலை - வட்டக்கொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தில்,  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, வட்டக்கொடை நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும்  இன்று (28) நண்பகல் 12 மணிமுதல் நான்கு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளன என்று, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

அத்துடன் மேற்படி நபரது குடும்பமும் அவருடன் தொடர்பைப் பேணியவர்களும், வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்  யொக்ஸ்போர்ட் தோட்டம் முழுவதும், இன்று (28) தொற்று நீக்கம் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யொக்ஸ்போர்ட் தோட்டத்திலும் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X