Janu / 2025 ஜூன் 12 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டவளை- ஆகரவத்தை பிரதான வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் ஹட்டன், டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு மற்றும் கலஞ்சியசாலை மண்சரிவினால் சேதமாகியுள்ளது
மலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை - ஆகரவத்தை பிரதான வீதியின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளமையினால் கனரக வாகனம் பயணிக்க முடியாத நிலையில் குறித்த வீதியின் பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள் மாத்திரம் பயணிக்க முடியும் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேலை ஹட்டன், டிக்கோயா டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு ஒன்றும் தோட்ட ஆயுத களஞ்சியசாலையும் மண்சரிவு காரணமாக சேதமாகியுள்ளது.
எம்.கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ



5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago