2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வட்டவளையில் ஒருவழிப் போக்குவரத்து; சாரதிகளுக்கு எச்சரிக்கை

Kogilavani   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, வட்டவளைப் பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால், ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில், நேற்று  (23) மாலை பெய்த கடும் மழை காரணமாக, வட்டவளைப் பொலிஸ் நிலையத்துக்கு அருகில், வீதி தாழிறங்கியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குறித்த பகுதியில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று (23) மாலை பெய்த கடும் மழையால் பாரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. 

தற்போது குறித்த பகுதியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருவதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தாழிறங்கியுள்ள வீதியைப் புனரமைப்பதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X