Gavitha / 2020 நவம்பர் 26 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வதைப் பகுதியில் வசிக்கும், உயர்தர வகுப்பு மாணவன் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
தனது பாட்டியின் வீட்டில் வசிக்கும் குறித்த மாணவன், பாடசாலை விடுமுறை காலத்தில், கொழும்பு, ஊருகொடவத்தையிலுள்ள தனது தந்தையின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.
இவர், கொழும்பில் இருந்து வரும்போது, கினிகத்தேனை, கலுகல பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை முடிவின்போதே, இவருக்கு தொற்று இருப்பது, இன்று (26) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர், கடந்த 25ஆம் திகதி, தான் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்றுள்ளார் என்றும் எனினும் இவர் கொழும்பில் தங்கியிருந்து பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டமையால், இவரை பாடசாலை நிர்வாகத்தினர் வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
எவ்வாறாயினும் தற்போது அந்தப் பாடசாலைக்கும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், வைரஸ் தொற்றுக்கு உள்ளான மாணவன், மாத்தறையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
எனினும் குறித்த பாடசாலைக்கு தொற்று நீக்கி தெளித்ததுடன் தொற்றுக்குள்ளான மாணவனை மாத்தறை சுயதனிமை நிலையத்திற்கு அனுப்புவதாகவும் பாட்டியை தொடர்ந்து சுயதனிமைப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026