மொஹொமட் ஆஸிக் / 2019 ஜனவரி 31 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, வத்துகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிட்டியேகெதர ரஜமஹா விகாரையின், 300 வருடங்கள் பழமைவாய்ந்த இரண்டு கோபுரங்கள் களவாடப்பட்டுள்ளன என, வத்துகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 300 வருடங்களுக்கு மேல் பழைமையான மேற்படி விகாரை, ஸ்ரீ விக்கிரம ராஜசிங்ஹ மன்னர் காலம் முதல் வழிபாடுகளுக்காக உருவாக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டு, மேற்படி விகாரை புனர்நிரமாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (29) அதிகாலை, விகாரையின் கோபுரங்கள் திருடப்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வத்துகாமம் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
24 minute ago
40 minute ago
52 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
52 minute ago
55 minute ago