Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Janu / 2025 ஜூலை 03 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டிக்கு குடுகல வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து, வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் 15 பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த நேரத்தில், சுமார் 25 பயணிகள் பேருந்தில் இருந்தனர். பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென தனது இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறந்ததால், ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி மாவட்ட மேலாளர் சனத் பிரசன்ன தெரிவித்தார்.
அவர் பேருந்தை மூட முயன்றபோது, பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து, அது கவிழ்ந்தது. காயமடைந்த பயணிகள் சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025