2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

வந்தது வசந்தகாலம் வாருங்கள் மகிழுங்கள்

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியா மாநகரசபை கலைக்கப்பட்ட போதும் விசேட ஆணையாளரின் தலைமையில் ஏப்ரல் வசந்த கால களியாட்ட நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஏப்ரல் 1ஆம் திகதி சனிக்கிழமை காலை கிறகறி வாவி கரையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் முப்படையணியினரின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.

நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் சுஜீவ போதிமான தலைமையில் ஆரம்பமாகிய ஏப்ரல் வசந்தகால களியாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரட்ன சிறப்பு அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உட்பட பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.

கடந்த வருடங்களை விட இம்முறை பெருந்திரளான சுற்றுலா பயணிகள் வருகை தருவாகள் என எதிர்பார்க்கப்படுகிறது. நுவரெலியாவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்களிலும் சுற்றுலா விடுதிகளிலும் முன்கூட்டியே பதிவுகள் செய்துள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த காலத்தை கழிப்பதற்காக வருகைதரவிருக்கும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை நுவரெலியா மாநகரசபை செய்து கொடுப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக நுவரெலியா பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X