2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

வனராஜா விபத்தில் மூவர் படுகாயம்

Editorial   / 2024 ஜூன் 07 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்-  வனராஜா கல்பள்ளி பகுதியில் கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாமிமலை பகுதியில்  மரண வீடொன்றுக்கு வந்த குழுவினர் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கார் வீதியை விட்டு விலகி வனராஜா கல்பள்ளிய பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் டிக்கோயா- கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

  ​​காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில்  சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X