2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

வனராஜாவில் ஆட்டோ விபத்து: இருவர் படுகாயம்

Editorial   / 2025 நவம்பர் 06 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செ.தி.பெருமாள்

வனராஜாவில் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் டிக்கோயா-கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான சாலையில் வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வியாழக்கிழமை (06) அன்று  மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கனமழை காரணமாக வழுக்கும் சாலையில் சென்ற முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநருடன்,  தந்தை, தாய் மற்றும் மூன்று குழந்தைகள் பயணித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X