2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வயோதிபரை காணவில்லை

Janu   / 2025 ஜூலை 29 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை லோனாக் தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த நபரின் மனைவி நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தானும் தனது கணவரும் 24 ஆம் திகதியன்று வெலிஓயா கிராம ​அலுவலரை  சந்திக்க சென்று வீடு திரும்புவதற்காக ஹட்டனில் இருந்து கலவான இ.போ.ச பேருந்தில் ஏறியதாக காணமல்போனவரின் மனைவி அழகன் யோகமணி, தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்தில் ஏறி தான் வட்டவளை பகுதியில் இறங்கிய நிலையில் அவரது கணவர் இறங்கவில்லை எனவும் ​மேலும் இது தொடர்பாக நடத்துனரிடம் விசாரித்ததில் அவர் போன்ற ஒருவர் இரத்தினபுரிக்கு அருகே  இறங்கியதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அந்தப் பகுதியில் தேடியும் எந்த தகவலும் இல்லாததால், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.   

மேலும் இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

எச். எம் சுதத் ஹேவா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .