Niroshini / 2021 மே 09 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.கிருஸ்ணா
கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் புதிய நிர்வாகம் அமைப்பதுத் தொடர்பான பொதுக்கூட்டம் என்பன, பாடசாலை பிரதான மண்டபத்தில், பாடசாலை அதிபர் பீ.அனிஷ்டஸ் தலைமையில், அண்மையில் நடைபெற்றது.
புதிய நிர்வாகக் குழுவின் தலைவராக பாடசாலை அதிபர் அனிஷ்டஸ், செயலாளராக விஜயபிரதாபன், பொருளாளராக காதர் சாய்பு, உப தலைவராக முருகதாஸ், உப செயலாளராக மனோகரன், உப பொருளாளராக சுதாகர், போஷகராக சந்திரகுமார் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன்போது மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வை, பாடசாலையின் பழைய மாணவரும் தமிழ் எப்.எம் வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளருமான பார்தீபன் ரமேஸ் தொகுத்து வழங்கினார்.
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago