Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 14 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வலப்பனை ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு நேற்று முன்தினம் (12) சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல், டீசல் விநியோகத்தின் போது, இடம்பெற்றுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வாகன சாரதிகளால் வலப்பனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை ஏற்று, வலப்பனை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஹெட்டியாராச்சி தலைமையிலான குழுவினர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று விசாரணை செய்த போது, ஆயிரம் ரூபாய்க்கு, எரிபொருள் நிரப்ப பணம் வழங்கப்பட்டால் 800 ரூபாய்க்கு குறைவாகவே எரிபொருள் நிரப்பபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இவ்வாறு பல மோசடிகள் அம்பலமாகியுள்ளன.
இதையடுத்து அந்த நிரப்பு நிலையத்துக்கு சீல் வைத்து மூடியுள்ள பொலிஸார், இது தொடர்பாக ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஐ.ஒ.சி நிறுவன அதிகாரிகள் நேற்று (13) அங்கு வருகைத் தந்து, எரிபொருள் நிரப்பும் குழாய் மற்றும் இயந்திரங்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்ததாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .