Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 11 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 200 குடும்பங்களைச் சேர்ந்த 779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால், வலப்பனை பிரதேச செயலகப் பிரிவு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புரூக்சைட் மற்றும் கல உட பத்தனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் இரண்டு உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 2 வீடுகள் முழுமையாகவும் 194 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .