R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
டிக்கோயா- வனராஜா சமர்வீல் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தையைப் பிடிக்க அதிகாரிகள், பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலையிலேயே, குறித்த சிறுத்தை மரத்தில் ஏறியுள்ளது.
.ஆறு அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து. சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத் தந்ததுடன், சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் இனந்தெரியாதவர்களால், விரிக்கப்பட்ட வலையில் தப்பிப்பதற்காக, சிறுத்தை மரத்தில் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்கள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


4 minute ago
12 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
15 minute ago
17 minute ago